உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி முதல் துவக்கம்

நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குபதிவுகள் 9 மையங்களில் வாக்கு எண்ணும் பணி துவங்கியது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 19 இடங்களில் வாக்கு எண்ணும் மையத்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்குப் பதிவுகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், பாப்பாகுடி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், களக்காடு, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் 1188 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு பதிவுகள் 9 வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணும் பணி கொங்கன்தான் பாறையில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. இதேபோல் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 19 ஊராட்சி ஒன்றியங்களில் இந்த வாக்கு எண்ணும் பணி இன்று துவங்கின.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!