நெல்லை கல்லூரி மாணவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணை வழங்கல்

நெல்லை கல்லூரி மாணவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணை வழங்கல்
X

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு TCS நிறுவனத்தின் பணி நியமன ஆணைகளை ஸ்காட் கல்வி குழுமங்களின் நிறுவனர், முனைவர் S.கிளிட்டஸ் பாபு வழங்கினார்.

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும் 81 இறுதி ஆண்டு மாணவர்களுக்கு TCS நிறுவனத்தின் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும் 81 இறுதி ஆண்டு மாணவர்களுக்கு TCS நிறுவனத்தின் பணி நியமன ஆணை வழங்கும் விழா.

TCS நிறுவனம் இந்த ஆண்டு நடத்திய தேசிய அளவிலான வேலைவாய்ப்புக்கான தேர்வில் திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும், இறுதி ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளார்கள். ஸ்காட் கல்விக் குழுமங்களின் நிறுவனர், முனைவர் S.கிளிட்டஸ் பாபு 81 மாணவர்களுக்கும் TCS நிறுவனத்தின் பணி நியமன ஆணைகளை அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கினார்.

TCS நிறுவனத்தின் தேசிய அளவிலான தேர்வில் வெற்றி பெறுவதற்க்கான பயிற்சிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் வல்லுநர்களைக் கொண்டு.மாணவர்களுக்கு வழங்கி, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி நிர்வாகம் கிராமப்புற மற்றும் நகர்புறத்தை சார்ந்த 81 மாணவர்களுக்கு TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தந்து வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அவர்களின் தனித் திறமைக்கேற்ப டிசிஎஸ் நிறுவனத்தின் பிரிவுகளான IOT, AWS, ITIS, சேல்ஸ் போர்ஸ் ஆகிய துறைகளில் சிறப்புப் பயிற்சிகளை TCS நிறுவனத்தின் மூலம் கல்லூரியில் இருந்தே பெற்று வருகிறார்கள். இந்த பயிற்சியில் சிறப்பாக கலந்துகொண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள மாணவர்கள் சம்பள உயர்வும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பு பெற்றுள்ள மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை சர்வதேச வல்லுநர்களைக் கொண்டு ஆன்லைன் மூலமாக தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி TCS நிறுவனம் பயிற்சிக்கான சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

மேலும் TCS வல்லுனர்களுக்கிடையான கலந்துரையாடல் மூலம் மாணவர்களின் தொழில்நுட்ப சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்படுவதால், வெகு விரைவில் வெளிநாடு செல்வதற்க்கான சந்தர்ப்பங்களும், TCS நிறுவனத்தின் மூலம் பணி நியமன ஆணை பெற்றுள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப தங்களுக்கு இஷ்டப்பட்ட இடங்களில் வேலைவாய்ப்பும் அல்லது வீட்டில் இருந்தே பணி புரியும் மற்றொரு வாய்ப்பும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வழங்கப்பட இருக்கிறது. இறுதி ஆண்டு படிக்கும்போதே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாலும், வேலைவாய்ப்புக்குப்பின் கிடைக்கும் அனைத்து அனுபவங்களும், பயிற்சிகளும் கல்லூரியிலேயே கிடைத்து வருவதாலும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் படித்து வருகிறார்கள். தங்களின் குழந்தைகளுக்குப் படிக்கும்போதே வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களது வளமான எதிர்காலத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு தாங்கள் மிகவும் நன்றிக் கடன்பட்டிருப்பதாக உணர்ச்சிப்பெருக்குடன் பெற்றோர்கள் பாராட்டினார்கள்.

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அகில இந்திய தொழில் நுட்ப அடல் தரவரிசைப் பட்டியலில் (ARIIA Ranking 2021) Excellent Band இடத்தை பெற்றுள்ளது. இந்திய கல்வி அமைச்சகத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான (MIC) தர வரிசைப் பட்டியலில் அதிகபட்சமான இடமான நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுடன் சிறப்பாக இணைந்து பணியாட்சியதற்காக அகில இந்திய தொழில் நுட்ப கழகம் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய சர்வேயில் பிளாட்டினம் அந்தஸ்தும் பெற்றுள்ளது. இங்கு பணியாற்றும்.பேராசிரியர்கள் இந்த ஆண்டு 290 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி இதழ்களில் வெளியிட்டும், 48க்கும் மேற்ப்பட்ட காப்புரிமைகளைப்.பதிவு செய்தும் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். கடந்த வாரம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த அரசு டெகத்தான் போட்டியில் மாணவர்கள் கலந்து வெற்றி பெற்று 50,000 ரூபாய் பரிசு மாவட்ட ஆட்சியாளரிடம் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். தமிழ்நாடு மாணவர்களுக்கு இடையிலான புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் கணிப்பொறி மாணவி கலந்து வெற்றி பெற்று ரூபாய் 1,00, 000 பரிசும் பெற்றுள்ளார்.

கல்லூரியில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட IOT, AI, Cyber security, Robotics, Data science, Product Development CurToTM ஆய்வகங்களில் மாணவர்கள் பயிற்சி பெறுவதால் இந்த சாதனைகளை அவர்களால் செய்ய முடிகிறது. மேலும் கல்லூரிக்குள் இயங்கி வரும் தொழில் நிறுவனங்களும் தேவையான பயிற்சி அளித்து மாணவர்களை சிறப்பாக உருவாக்கி வருகிறார்கள். Texas Instruments (TI), National Instruments (NI), CISCO, IBM, FANUC CUITM பன்னாட்டு நிறுவனங்களின் ஆய்வகங்களும் கல்லூரியில் செயல்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. சுய தொழில்களை ஊக்குவிக்கும் MSME நிறுவனத்தின் பிரிவும் அரசு நிதி உதவியுடன் கல்லூரியில் செயல்படுகிறது.

மேற்கண்ட தொடர் முயற்சிகளால், தேசிய அளவிலான TCS தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்து வெற்றி பெற வைத்து பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி புரட்சிகரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. இறுதியாண்டு பயிலும் 274 மாணவர்கள் எற்கனவே வேலை வாய்ப்பு பெற்று, சம்பளத்துடன் தேர்வாகியுள்ள நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. படிக்கும் போதே, சிறந்த பயிற்சியின் மூலம் அதிக சம்பளம் பெற்று தரும் இந்த அரிய திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் கல்லூரியின் பொதுமேலாளர் வளர்ச்சி) முனைவர் K.ஜெயக்குமார், பொதுமேலாளர் (நிர்வாகம்) S.கிருஷ்ணகுமார், முதல்வர் முனைவர் V.வேல்முருகன், வேலைவாய்ப்புத் துறை டீன் முனைவர் A.ஞான சரவணன், பயிற்சித்துறை டீன் முனைவர் S.பாலாஜி, தொழில்முனைவோர் துறை இயக்குநர் முனைவர் லூர்டஸ் பூபால ராயன், கல்விசார் துறைப் பேராசிரியர் முனைவர் L.R.பிரியா, வளாக மேலாளர் J.சகாரியா கபிரியேல், தொலை தொடர்புத் துறைப் பேராசிரியர் முனைவர் கரோலின், பேராசிரியர் டேவிட் ஐலிங், பேராசிரியர் முனைவர் ஜாஸ்பெர் ஞான சந்திரன், முக்கிய நிர்வாகிகள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரையும் கல்லூரி நிறுவனர் முனைவர் S.கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண் பாபு ஆகியோர் பாராட்டினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்