நெல்லையில் தீவிர தூய்மை பணி, விழிப்புணர்வு முகாம் துவக்கம்

நெல்லையில் தீவிர தூய்மை பணி, விழிப்புணர்வு முகாம் துவக்கம்

கேடிசி நகரில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

நெல்லை கேடிசி நகரில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

சென்னையில் இன்று (03-06-22) தமிழக முதல்வர் "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்ததை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி பாளை மண்டலம் கேடிசி நகரில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் தலைமையில், மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டபேரவையில் அரசு தனது வளர்ச்சிக்கான திட்டத்தில் நகர தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் ஒவ்வொறு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்றும், இம்முகாம்களில் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் ஊக்கப்படுத்தப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து, தமிழக முதல்வர் இன்று சென்னை மாநகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, இன்று (03-06-22) திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் கேடிசி நகரில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் தலைமையில், மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தூய்மைபணி குறித்த உறுதி மொழி எடுக்கப்பட்டது, மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்கிய குடியிருப்புதாரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மக்கும் குப்பை மக்காத குப்பை மற்றும் அபாயகரானவை என்று குப்பைகளை தரம் பிரித்து வழங்க வழியுறுத்தும் துண்டுபிரசுரங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டது. பேருந்து நிலையம் பூங்காக்கள் வழிபாட்டு தளங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தமாக பராமரிக்க வலியுறுத்தும் விழப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடவும், நீர்நிலைகளை சுத்தமாக பராமரிக்க வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை ஒவ்வொறு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் நடத்திட ஏற்பாடு செய்ய மாநகர பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ், நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளர் நடராஜன், மாநகர்நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் ரம்ஜான்அலி மற்றும் சுகாதார அலுவலர்கள் அரசகுமார், முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், சங்கரலிங்கம், சங்கரநாராயணன், டெங்கு ஒழிப்பு களபணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story