ராயல் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கல்லீரல், இரைப்பை உயர் சிகிச்சை பிரிவு துவக்கம்
தென் தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் குழந்தைகளுக்கான கல்லீரல் மட்டும் இரைப்பை உயரிய சிகிச்சை சிறப்பு பிரிவு நெல்லை ராயல் மருத்துவமனையில் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை குரோம்பேட்டையில் இயங்கிவரும் ரேலா மருத்துவமனை குழந்தைகளுக்கான எல்லா வகையான உடல் உறுப்புகளுக்கும் உயரிய சிகிச்சை அளித்து வருகிறது. உலக அளவில் உயர் அங்கீகாரமும் பெற்றுள்ளது. இந்த மருத்துவமனையுடன் இணைந்து நெல்லை மாவட்டம் என்ஜிஓ காலனியில் இயங்கி வரும் ராயல் மருத்துவமனையில் இன்று முதல் கல்லீரல் மற்றும் இரைப்பை உயரிய சிகிச்சை சிறப்பு பிரிவு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தலைமையேற்று கல்லீரல் மற்றும் இரைப்பை உயரிய சிறப்பு சிகிச்சை பிரிவை துவக்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் ராயல் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனரும், பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை துறையில் முதுநிலை நிபுணருமான டாக்டர். செய்யது இப்ரஹிம் தெரிவித்ததாவது:-
ரேலா மருத்துவமனையில் இயங்கும் கல்லீரல் மற்றும் இரைப்பை பிரிவில் எல்லா வகையான நோய்களுக்கும் சிறப்பு சிகிச்சைகள் அளித்து வருகிறது. இங்கு கல்லீரல் மாற்று சிகிச்சையில் 95% வெற்றி கொடுக்கும் உலக தரம் வாய்ந்த மருத்துவமனையுடன் கைகோர்த்து மக்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். கல்லீரல் பிரச்சனைகள் கருவினில் வளரும் சிசுக்களுக்கும், வளர்கின்ற பருவத்திலும் வரலாம். இந்த நோய்கள் ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதற்கு உண்டான சிகிச்சை அளித்து கல்லீரல் செயலிழப்பை தவிர்க்கலாம். இந்த சிகிச்சைகள் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்க மருத்துவமனையில் வசதிகள் செய்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு கல்லீரல் மற்றும் இரப்பையில் ஏற்படும் அனைத்து நோய்களையும் ஆரம்பத்தில் கண்டறியும் வசதிகளையும், அதற்கு உண்டான எல்லாம் மருத்துவ அல்லது அறுவை சிகிச்சைகளையும் தென்மாநில மக்களுக்கு சிறந்த முறையில் கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu