தூய்மைப்பணியாளர்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள் வழங்கல்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுபடி, மாநகர நலஅலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின்படி, உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் இன்று பாளையங்கோட்டை மண்டலத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அவ்வகையில், மாநகராட்சியில் பணியாற்றும் 250 தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, கை கழுவும் திரவம், முக கவசம், சோப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும் அனைத்து பணியாளர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. உடன் மேற்பார்வையாளர் முருகன், சண்முகம் Lcf அருள் செல்வன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu