விளையாட்டில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு உதவி - நெல்லை போலீஸ் துணை கமிஷனர்
இளைஞர்கள் லட்சிய கனவுகளில் ஜெயிப்பது எப்படி? என்பது குறித்த கருத்தரங்கம் மேலப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நெல்லையில் 75 வது சுதந்திர தினவிழாவையொட்டி, இளைஞர்கள் லட்சிய கனவுகளில் ஜெயிப்பது எப்படி? என்பது குறித்த கருத்தரங்கம் மேலப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் சங்கம், அலங்கார் சினிமாஸ் மற்றும் ஜிஎம்எஸ் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் பங்கேற்றார்.
இந்த கருத்தரங்கிற்குப்பின் விளயைாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், ஒவ்வொரு இளைஞர்களும் தங்களுடைய லட்சிய கனவுகளை வளர்த்து கொண்டு நீரஜ் சோப்ரா போல எதிர்காலத்தில் பிரகாசிக்க வேண்டும். இளைஞர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதையும், கோபங்களையும் தவிர்த்து, எவ்வித வழக்குகளிலும் சிக்கி கொள்ளாமல் தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடித்து முன்னேற வேண்டும்.
விளையாட்டு துறைக்கு கொடுக்கும் அதே முக்கியதுவத்தை உங்கள் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தர வேண்டும். விளையாட்டு துறையில் முன்னேற துடிக்கும் நெல்லை மாநகர இளைஞர்களுக்கு தேவைப்படும் எல்லா வித உதவிகளும் செய்து தர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
விழாவில் லயன்ஸ் சங்க வட்டார தலைவர் மணிகண்டன், தலைவர் சங்கரவேலு, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மின்னல் சிவா, டாக்டர் வாலிஸ்வரன், ஜிஎம்எஸ் பள்ளியின் தாளாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu