ஹாக்கி லீக் போட்டிகள் 6ம் தேதி தொடக்கம்..!

ஹாக்கி லீக் போட்டிகள் 6ம் தேதி தொடக்கம்..!
X

ஹாக்கி லீக் போட்டிகள் (கோப்பு படம்)

நெல்லையில் வழக்கறிஞர் A.கருப்பையா - K.சண்முகசுந்தரியம்மாள் நினைவு கோப்பைக்கான மாணவ மாணவியருக்கான ஹாக்கி லீக் போட்டிகள் நடக்கவுள்ளன.

வழக்கறிஞர் A.கருப்பையா - K.சண்முகசுந்தரியம்மாள் நினைவு கோப்பைக்கான 14 வயது மற்றும் 17வயதிற்கு உட்பட்ட மாணவ மற்றும் மாணவியருக்கான ஹாக்கி லீக் போட்டிகள்:

ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சார்பில் 14 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கான ஹாக்கி லீக் போட்டிகள் 06.12.2023 முதல் 09.12.2023 வரை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு முதல் நான்கு நிலைகளை பெறுபவர்களுக்கு வெற்றிக்கோப்பைகளும் பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பு கேடையங்களும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் கலந்துகொள்ளலாம். 14வயதுற்கட்பட்டோருக்கான பிரிவில் 01.01.2007க்கு பின்னர் பிறந்தவர்களும், 17வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் 01.01.2007க்கு பின்னர் பிறந்தவர்களும் கலந்துகொள்ளலாம். நுழைவுகட்டணம் இல்லை.

கலந்துகொள்ள விரும்பும் அணிகள் 9940341508 / 9043036967 என்ற WhatsApp ல் 01.12.2023 பிற்பகல் 12மணிக்கு முன்னர் அணியின் பெயர்களை முன்பதிவு செய்யவேண்டும். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி நிர்வாகிகள் முனைவர் சேவியர், முருகேசன், பீர் அலி, மாரிக்கண்ணன், வெராசிட்டி நிறுவனம் மற்றும் ஆயிரம் பவுண்டேஷன் திரு ராஜா, ஆயிரம், சார்லஸ், ஜான்சன், முனைவர். ஹமர் நிஷா, மங்கை, ஜெயா, ராதா , மோகன் , சிந்தா ஆகியோர் செய்துவருகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!