தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
X

திருநெல்வேலி மேலப்பாளையத்தில்  இன்று கூடிய ஆட்டுச்சந்தையில் திரண்ட வியாபாரிகள்

இந்த சந்தைக்கு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, மாடுகள் வரத்தாகும்

மேலப்பாளையம் கால்நடை சந்தையில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் பிரதான கால்நடை சந்தைகள் உள்ளன. இந்த சந்தைக்கு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இந்த சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த சில மாதங்களாக தொற்றின் காரணமாக இந்த சந்தை செயல்படவில்லை.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தை இன்று களைகட்டியது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இன்று மட்டும் மேலப்பாளையம் சந்தையில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கால்நடைகளை வாங்கி சென்றனர்.

Tags

Next Story