நெல்லையில் கல்லூரி மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
நெல்லை ரோஸ் மேரி கல்லூரி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரோஸ்மேரி கல்லூரி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்டம் ரோஸ்மேரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் மீராள்பானு ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் *181* குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க *1098* என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவலன் SOS செயலி குறித்தும், குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இக்காலகட்டத்தில் இணையவழி மூலம் பணபரிவர்த்தனை மிகவும் இன்றியமையாததாக உள்ளது. எனவே பொதுமக்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது கவனமுடன் இருக்க வேண்டும் எனவும், செல்போனிற்கு வரும் OTP எண்களை பகிர வேண்டாம் எனவும் இணைய வழி குற்றங்கள் தொடர்பாக 155260 தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu