நெல்லையில் குழந்தைகளுக்கான இதய குறைபாடுகள் கண்டறியும் இலவச முகாம்
குழந்தைகள் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர். நிகில் A G சாலமன் மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ராஜ் பேட்டியளித்தார்.
நெல்லையில் குழந்தைகளுக்கான இதய குறைபாடுகளை கண்டறியும் இலவச முகாம். வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து குழந்தைகள் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர். நிகில் A G சாலமன் மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ராஜ் கூறியதாவது.
சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, திருநெல்வேலியில் உள்ள கிருஷ்ணா மெடர்னிடி ஹோம் & பீடியாட்ரிக் மையத்துடன் இணைந்து, குழந்தைகளுக்காக இலவச ஸ்கிரீனிங் முகாம் டிசம்பர் 29ம் தேதி நெல்லையில் நடைபெறுகிறது.
பிறவிலேயே இதயத்தில் குறைபாடு (கான்ஜெனிடல் ஹார்ட் டிஃபெக்ட்) என்பது, பிறக்கும்போதோ குழந்தைக்கு அதன் இதயத்தின் அமைப்பிலும், இரத்தக் குழாய்களிலும் உள்ள குறைபாடுகளைக் குறிக்கிறது. பொதுவாக 125 குழந்தைகளில் 1 குழந்தைக்கு இவ்வாறு பிறவிலேயே இதயக் கோளாறுகள்) குறைபாடுகள் உள்ளன. இத்தகைய நோய்கள் மற்றும் குறைபாடுகளைப் பற்றி அதிகம் விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும், அதற்குத் தகுந்த தரமான மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள பிரச்சினைகளினாலும், இவற்றுக்குச் சிகிச்சை அளிப்பதில் பொதுமக்கள் பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர்.
இந்த முகாம் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, திருநெல்வேலியில் கிருஷ்ணா மெடர்னிடி ஹோம் & பீடியாட்ரிக் மையத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. பிறவிலேயே இதயக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த முகாமிற்கு வந்து தமது குழந்தைகளுக்கு உள்ள குறைபாடுகளை கண்டறியலாம். (ஸ்கிரீனிங்) மூச்சு விடுவதில் சிரமம். எடை கூடாதிருத்தல், சருமம் நீலமாக மாறுதல், கூடுதலாக வியர்வை ஏற்படுதல், மூச்சுத்திணறல் மற்றும் படபடப்பு, பசியின்மை, நடுக்கம் போன்றவை அடிக்கடி ஏற்படும் குழந்தைகள் இங்கு வந்து ஸ்கிரீனிங் செய்து கொள்ளலாம். இந்த முகாமில் இதய நோய்கள் இருப்பதாகக் கண்டறியபட்ட குழந்தைகளுக்கு தமிழக முதல்வரின் உடல்நலக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்கப்படும்.
அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சி.ஷி முத்துக்குமரன் (பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பிறவி இதயக் கோளாறுகளுக்கான ஊடுருவி சிகிச்சை மருத்துவர் - அடல்ட் & பிடியாட்ரிக் கான்ஜெனிடல் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட்) அவர்களும், டாக்டர் நெளில் சாலமன் (குழந்தைகள் & பெரியவர்களின் இதய அறுவை சிகிச்சை வல்லுநரும் ஆலோசனைகளை வழங்குபவர்கள்.
இந்த முகாம் 29 டிசம்பர் 2021, புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். அப்போலோ மருத்துவமனை குழந்தைகள் மற்றும் 16 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினருக்கான பிரத்யேகமான நமது நாட்டிலேயே மிகவும் தனிப்பட்ட முறையில் இந்த சிகிச்சைகளை வழங்குகிறது என்று தெரிவித்தார். பேட்டியின்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனை மேலாளர் ராஜ்குமார் உடனிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu