/* */

இராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்

பாளை. இராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா வேத மந்திரங்கள் முழங்க கொடிேயற்றம் சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

இராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்
X

பாளையங்கோட்டை இராஜகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடிேயற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடிேயற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமையான வைணவ திருக்கோவில் அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோவில். இத் திருக்கோவிலில் சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிய மன்னாரும், மூலஸ்தானத்தில் வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணரும், உற்சவராக ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் என 3 நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கின்றாா். சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்ச்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று காலை நடை திறந்ததும் விஸ்வரூப தாிசனம் திருமஞ்சனம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கருடக்கொடியானது சக்கரத்தாழ்வாருடன் 4 மாடவீதி ரத வீதிகளில் வலம் வந்து கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னா் 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெற்று கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழா அன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், நிறைவு நாளான தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத இராஜகோபாலா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடு நடக்கிறது.

Updated On: 10 March 2022 8:17 AM GMT

Related News