இந்தியாவிலேயே முதன்முறையாக சினேகா மனநல மருத்துவ மையத்தில் முதலுதவி பயிற்சி

இந்தியாவிலேயே முதன்முறையாக சினேகா மனநல மருத்துவ மையத்தில் முதலுதவி பயிற்சி
X

இந்தியாவிலேயே முதன்முறையாக சினேகா மனநல மருத்துவ மையத்தில் மனநல முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சமூக விழிப்புணர்வுள்ள சுமார் 30 பேருக்கு முதற்கட்டமாக இந்த மையம் சார்பில் மனநல முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது

இந்தியாவிலேயே முதன்முறையாக சினேகா மனநல மருத்துவ மையத்தில் மனநல முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சினேகா மனநல மருத்துவ மையம் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மனநல மருத்துவ சங்கம் இணைந்து நடத்தும் மனநல முதலுதவி பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா சினேகா மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது. சோசியல் அவர்னஸ் உள்ள தகுதியான சுமார் 30 பேருக்கு முதற்கட்டமாக சினேகா மனநல மருத்துவ மையம் சார்பில் மனநல முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் கவுன்சிலிங் அளிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் இவர்களுக்கு முழுமையாக அழிக்கப்பட்டது..இதன் மூலம் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அல்லது அல்லது தெரிந்தவர்கள் மூலம் வருபவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு அவர்களது மனநிலை பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க உதவி செய்வார்கள். இது இந்தியாவில் முதன்முறையாக சினேகா மனநல மருத்துவ மையத்தில் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், சினேகா மனநல மையம் மனநல மருத்துவர் டாக்டர் .நூருல் ஹசன் வரவேற்புரை ஆற்றினார். மனநல மருத்துவர் டாக்டர் சிவசைலம் முன்னிலை வகித்தார். செயலாளர் ராஜன், டாண் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் ஜானகிராம் , பொருளாளர் - பட்டயத்தலைவர் அந்தோணி,, முருகன் சார்டர் பிரசிடெண்ட் கீரின்சிட்டி லயன்ஸ் கிளப்.மகேஷ் நிறுவனர் அன்னைதெரசா பொதுநல அறக்கட்டளை ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். லயன்ஸ் மாவட்ட துணை ஆளுநர் விஸ்வநாதன், சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். சினேகா மனநல மைய இயக்குனர் டாக்டர் சி. பன்னீர் செல்வன் தலைமை உரை ஆற்றினார். சினேகா மனநல மையம் செவிலியர் பெஜன் பிரபு நன்றி உரையாற்றினார்.

Tags

Next Story
நைட் 7 மணிக்கு மேல டீ குடிக்க கூடாதாமா?..அப்படி குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வரும்!..டீ பிரியர்களே உஷார்..!