சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு: மீட்டு தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு: மீட்டு தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
X

ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாட்டுப் பாதையை மீட்டுத்தரக் கோரி மாவீரன் சுந்தரனார் மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

வேப்பங்குளத்தில் உள்ள சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு.

மாவீரன் சுந்தரனார் மக்கள் இயக்க நிறுவனர் மாரியப்பன் பாண்டியன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி பஞ்சாயத்தில் உள்ள வேப்பங்குளத்தில் தேவேந்திரகுல சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டு பாதையில் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை சரி செய்து தர வேண்டும் மற்றும் அரசு செலவில் சுடுகாட்டு கொட்டகை அமைத்து தர வேண்டுமெனவும், அந்த மனுவில் கூறபட்டிருந்தது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவீரன் சுந்தரம் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்பன் பாண்டியன் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்காட்சியின் நிர்வாகிகள் மற்றும் வேப்பங்குளம் கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!