நெல்லையில் 12 கல்லூரி நூலகங்களுக்கு கல்வியல் புத்தகங்கள்: ஆட்சியர் வழங்கல்
திருநெல்வேலி மாவட்டம் கல்வி நிறுவனங்களுக்கு புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் கல்வி நிறுவனங்களுக்கு புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் சார்பில் 12 கல்லூரிகளில் செயல்பட்டு வரும் நூலகங்களுக்கு கல்வியல் சார்ந்த புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு கல்லூரி நூலகர்களிடம் வழங்கினார்.
திருநெல்வேலி ரோட்டரி சங்கம் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நண்பர் முனைவர் விஜயராகவன் ஆகியோர் இணைந்து அமெரிக்காவில் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 32,000 அனைத்து வகையான பாட புத்தகங்களை சங்க முன்னாள் தலைவர் அந்தோணி பாபு மூலமாக வரவழைத்துள்ளனர். இவைகளை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 75க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் உள்ள நூலகங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு திருநெல்வேலியில் உள்ள 12 கல்லூரி முதல்வர்கள், நூலகர்கள் ஆகியோர்களிடம் 6000த்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி தலைசிறந்த ஆய்வாளர்கள், அறிஞர்கள் எழுதிய இத்தகையே நூல்கள் தாங்கள் பயிலும் கல்லூரி நூலகங்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த நூலகங்களை மாணவ- மாணவியர்கள் படித்து தங்களுடைய கல்வி திறனை வளர்த்து பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வெற்றி பெற்று சமுதாயத்தில் தலைசிறந்தவளர்களாக அனைவரும் போற்றும் படியான உயர்ந்த இடத்தினை பெற வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை முனைவர் ஹென்றி ஜெராம், கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் மரியதாஸ், ரோட்டரி சங்க தலைவர் சங்கர், ரோட்டரி சங்க இயக்குநர் ரமணி, சேவியர் கல்லூரி செயலாளர் அல்போன்ஸ் மாணிக்கம், சேவியர் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அருள் முனைவர் ஜான் கென்னடி, சங்க செயலாளர் அன்டோ ஜோ செல்வகுமார், மற்றும் சங்க உறுப்பினர்கள், கல்லூரிகளின் பேராசிரியர்கள், நூலகர்கள், கல்லூரியின் மாணவ- மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu