சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மின் நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்
பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மின் நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.
நெல்லையில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மின் நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு மின் நுகர்வோர் விழிப்புணர்வு வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.
நெல்லை பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நுகர்வோர் பாதுகாப்பு கவுன்ஸில், சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குருப் (சி.ஏ.ஜி) யின் திருநெல்வேலி மின் நுகர்வோர் மையம் இணைந்து மின் நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கிராத் ஓதி நிகழ்வு தொடங்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது நுகர்வோர் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர் டாக்டர்.பெனாசிர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் எம். முகமது சாதிக் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முனைவர் எஸ்.ஏ.செய்யது முகமது வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் சிறப்பு செய்யப்பட்டார்கள். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பாதுகாப்பு).இ. பேச்சிமுத்து,
மின்விபத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், சங்கர் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் முனைவர் கோ கணபதி சுப்பிரமணியன் மின் நுகர்வோர் கடமை மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்தும், மின் நுகர்வோர் மைய ஆலோசகர்.எஸ். சண்முகம் மின்சேமிப்பு பற்றியும், முதுநிலை ஆலோசகர் ஜி.முருக முரளிதரன் மின் நுகர்வோர் குறைகள் தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும், இளநிலை ஆலோசகர். சு. முத்துசாமி சூரிய ஆற்றல் பயன்பாடு குறித்தும் உரையாற்றினார்கள்.
மின் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி இசாத் பாத்திமா நன்றி கூறினார். கல்லூரி மாணவி அகமது சபானா நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர்.மு. முகமது சாதிக் கல்லூரி நுகர்வோர் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பெனாசிர், சிஏஜி ஆராய்ச்சியாளர் பாலாஜி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu