மேலப்பாளையத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

மேலப்பாளையத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
X

மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியாேகிக்கப்பட்டது.

மேலப்பாளையத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

நெல்லை மாநகர் மாவட்ட விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக "போதை ஒழிப்பு பிரச்சாரம்" நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் போதை பொருட்களை ஒழிப்போம் நம் தலைமுறையை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் துண்டுப் பிரசுரம் விநியோகம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் விமன் இந்தியா மூவ்மெண்ட் நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் சகோதரி எஸ்.எ.பாத்திமா தலைமையில் நடைபெற்றது.

அப்போது அப்பகுதியில் சென்ற பொதுமக்கள், கடைகள் மற்றும் வீடு வீடாக சென்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் யாஸ்மீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பானு, 29வதுவார்டு துணைதலைவி மைதீன்பாத்து, 29வது வார்டு செயலாளர் மஸ்தான்பீவி உடன் இருந்தனர். இதே போன்று பர்கிட்மாநகர் பகுதிகளில் மாவட்ட தலைவர் மஹ்மூதா ரினோஷா ஆலிமா தலைமையில் துண்டுப் பிரசுரம் விநியோகம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!