/* */

திமுக பிரமுகர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

நெல்லையில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் சரண்டைந்த அருண் பிரவினை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜெய் கணேஷ் உத்தரவு

HIGHLIGHTS

திமுக பிரமுகர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்
X

நெல்லையில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் சரண்டைந்த அருண் பிரவினை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜெய் கணேஷ் உத்தரவிட்டர்.

நெல்லையில் தேர்தல் பகையால் தீர்த்து கட்டப்பட்ட திமுக பிரமுகர். முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்; பரபரப்பு தகவல்கள்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் திமுக 38வது வார்டு செயலாளராக இருந்தவர் அபே மணி என்ற பொன்னுதாஸ் (வயது 38). நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பொன்னுதாஸை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பொன்னுதாஸின் உடலை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு உடற்கூறாய்வுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொலை செய்யப்பட்ட பொன்னுதாசின் தாயார் பேச்சியம்மாள் போட்டியிட விருப்பமனு பெற்றுள்ளார். இதற்கான நேர்காணலில் தாயார் பேச்சியம்மாள் கலந்து கொள்ள உள்ள நிலையில் உட்கட்சி பூசலில் ஏற்பட்ட மோதலால் நடந்த கொலை என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் வரும் 1ம் தேதி பாளையங்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடையை கொலை செய்யப்பட்ட பொன்னுதாஸ், குத்தகைக்கு எடுத்து திறக்க உள்ளார். இதனால் தொழில் ரீதியாக ஏற்பட்ட பகையா என்ற அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்,

இந்நிலையில் காவல் துறையினர் சம்பவம் நடந்த இடம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவிக்களை கண்காணித்து ஆய்வு செய்து வந்தனர், இந்த நிலையில் கொலை நடந்த முப்பத்தி ஆறு மணி நேரத்தில் காவல்துறையினர் 7 பேரை உடனடியாக கைது செய்துள்ளனர், மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அருண் பிரவீன் நெல்லை நீதிமன்றத்தில் ஜே எம் 4ல் நீதிபதி ஜெய் கணேஷ் முன்னிலையில் சரணடைந்தார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த , பேச்சிமுத்து, கருப்பையா, மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த,விக்னேஸ்வரன், ஈஸ்வரன், ஆசை முத்து, சாத்தான் குளத்தைச் சார்ந்த அழகுராஜ் பாளையங்கோட்டையை சேர்ந்த தேவராஜ் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரண்டைந்த அருண் பிரவின்னை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ஜே.எம். 4. நீதிமன்ற நீதிபதி ஜெய் கணேஷ் உத்தரவிட்டார். தேர்தல் முன்பகை காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது கொல்லப்பட்ட பொண்ணுதாஸின் தாயார் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநகராட்சி மண்டல தலைவர் பதவியை பிடிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் அருண் பிரவினும் தனது உறவினர் ஒருவருக்கு மண்டல தலைவர் பதவியை குறி வைத்து காய் நகர்த்தி வந்துள்ளார். எனவே பேச்சியம்மாள் தங்களுக்கு போட்டியாக வந்து விடக் கூடாது என்பதால் அவரை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பொன்னுதாஸிடம் அருண் பிரவின் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் பின்வாங்காமல் தனது தாயாரை போட்டியிட வைக்கும் முயற்சியில் பொனனுதாஸ் ஈடுபட்டுள்ளார்.

அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் அருண் பிரவீன் ஆட்களை வைத்து பொன்னுதாஸை தீர்த்து கட்டியதாக கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில நாளிலையே தேர்தல் பகை காரணமாக ஆளுங்கட்சி பிரமுகர் அதே கட்சி நபரால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 31 Jan 2022 4:50 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  3. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  5. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  6. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  7. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  10. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!