நெல்லையில் மாவட்ட அளவிலான தடகள பாேட்டிகள் தாெடக்கம்
நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான 22ம் ஆண்டு தடகள போட்டிகள் தொடங்கியது.
மாவட்ட அளவிலான 22 ஆம் ஆண்டு தடகள போட்டிகள் ஆரம்பம். மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்பு.
நெல்லை மாவட்ட அளவிலான 22 ஆம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு கோபிநாத் நினைவுத் தடகள சாம்பியன் போட்டிகள் நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் விளையாட்டு ஆலோசகர் மனோகரன் சாமுவேல், விளையாட்டுத்துறை தலைவர் பேராசிரியர் சண்முகநாதன் மற்றும் பள்ளி தாளாளர் பொன் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியின் தொடக்கமாக ஜோதி ஓட்டம் மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு விளையாட்டினை தொடங்கி வைத்தனர்.
2 நாட்கள் நடைபெறும் இந்த தடகள போட்டிகளில் தடகள ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மாவட்ட அளவிலான வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.
இந்த தடகளப் போட்டிகளில் இறுதி நாளான நாளை மாலை வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது. இந்த பரிசளிப்பு விழாவில் நெல்லை மாவட்ட தடகள போட்டிகள் தலைவர் அய்யாதுரை பாண்டியன், மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான செல்லபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu