திருநெல்வேலி மாவட்ட கலெக்டரிடம் பரபரப்பு மனு

திருநெல்வேலி மாவட்ட கலெக்டரிடம் பரபரப்பு மனு
X

திருநெல்வேலி மாநகர ஒலி, ஒளி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக திருநெல்வேலி கலெக்டரிடம் பரபரப்பு மனு அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பினால் முழு ஊரடங்கினை முன்னிட்டு அனைத்து தொழில் துறைகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்ட நிலையில் 2021 ஆம் ஆண்டும் மீண்டும் இரண்டாவது அலை என்ற பெயரில் மக்களையும் கூலித்தொழிலாளிகளையும் அன்றாட தொழில் வர்த்தக களையும் பாதிக்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்கனவே முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தவித்து வருகின்றோம்.

இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது, இதனால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளோம், எனவே மற்ற தளர்வுகளை போலவே எங்களுக்கும் கோவில் திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவை 50 சதவீத தளர்வுகளுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரி ஒலி ஒளி அமைப்பு பொருட்களுடன் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்து சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!