நெல்லையில் மெகா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு

நெல்லையில் மெகா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு
X

 பாளையங்கோட்டை அருகே உள்ள வண்ணாரப்பேட்டை மற்றும் பரணி நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் முகாமை ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் 5ம் கட்ட முகாம். வீடு வீடாக சென்று போடப்பட்ட தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

நெல்லை மாவட்டத்தில் ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம். 85000 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கொரோனா தொற்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 5ஆம் கட்டமாக இன்று 10ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மாநகர பகுதியில் 200 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 550 இடங்களிலும் ஆக மொத்தம் 750 மையங்கள் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டன. இந்த தடுப்பூசி முகாம் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள 100 நடமாடும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் முதலாவது தடுப்பூசியை 7 லட்சத்து 13 ஆயிரத்து 646 பேர் போட்டுள்ளனர். இரண்டாவது தடுப்பூசியை 2 லட்சத்து ஆயிரத்து 363 பேர் உள்ளனர். மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் 12 மணிக்கு மேலாக நடமாடும் மையமாக ஒவ்வொரு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவதற்கான திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது தடுப்பூசி போடுவதற்காக 76 ஆயிரத்து 16 பேர் உள்ளனர். இவர்களுக்கு செல்போன் மூலம் தடுப்பூசி போடுவதற்கான ஆடியோவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த முறை பல கல்லூரிகளிலும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு நடமாடும் சிறப்பு தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். பாளையங்கோட்டை அருகே உள்ள வண்ணாரப்பேட்டை மற்றும் பரணி நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் முகாமை ஆய்வு செய்தார். இந்த மெகா தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பாபநாசத்தில் உள்ள காணி மக்கள் 95% பேருக்கு தடுப்பு போடப்பட்டுள்ளன. அதேபோல வள்ளியூர் நரிக்குறவர் காலனியில் 95% தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மேலும் நெல்லை மாவட்டத்தில் 100% மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தடுப்பூசி போடும் போது ஆதார் அட்டை உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அட்டைகளை காண்பித்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டு வந்தனர். ஆனால் இன்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட மெகா சிறப்பு முகாமில் செல்போன் நம்பரை தெரிவித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil