நெல்லை-பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நெல்லை-பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லையில் பேருந்தில் பயணம் செய்பவர்களிடம் சானிடைசர், முக கவசம், அணிநது சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக பயணம் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தமிழக அரசின் புதிய தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பின் படி மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் 7 பணிமனைகளில் 240 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 116 நகர பேருந்துகளும், 124 புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதில் 116 நகர பேருந்துகளில் 99 பேருந்துகள் சாதாரண நகர பேருந்துகள் ஆகும். இவற்றில் மகளிர், மாற்று திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள் , திருநங்கைகள் அடையாள அட்டையுடன் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாநகர் பேருந்துகளை வண்ணாரபேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேருந்துகளை ஆய்வு செய்தார்.

அப்போது சானி டைசர் பயன்படுத்தும் படியும், பயணிகளிடம் முக கவசம் அணியவும். சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக பயணம் செய்யும் படியும் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
கழுத்து வீங்கி உயிரிழக்கும் ஆடுகள் - அந்தியூர் பகுதியில் பரபரப்பு!