தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க போட்டி: நெல்லை எப்எக்ஸ் கல்லூரி மாணவி சாதனை

தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க போட்டி: நெல்லை எப்எக்ஸ் கல்லூரி மாணவி சாதனை
X

தமிழகஅரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடந்த போட்டியில் ரூ.1 லட்சம் பரிசு வென்ற மாணவி அஸ்வதி மோகனை கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு பாராட்டினார்.

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் போட்டியில் ரூ.1 லட்சம் பரிசு வென்று எப்எக்ஸ் கல்லூரி மாணவி சாதனை.

தமிழக அரசு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம் நடத்திய போட்டியில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவி ரூ.1 லட்சம் வென்று சாதனை.

தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடந்த போட்டியில் ரூ.1 லட்சம் பரிசு வென்று சாதனை படைத்த நெல்லை வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவி அஸ்வதி மோகனை கல்லூரி நிறுவனர், முனைவர் கிளிட்டஸ் பாபு பாராட்டினார்.

தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் மாணவ-மாணவியர் மற்றும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில், கல்லூரியில் பயிலும் மாணவ கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது. 2016 ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் விவசாயத் தொழில். ஸ்மார்ட் சிட்டி, ஹெல்த் கேர், ஃபின் டெக் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறை மாணவர்களின் கண்டுபிடிப்புகள், அதில் ஏற்படும் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும், மாணவர் குழுக்கள் தங்களது புதுமையான யோசனைகளை வழங்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அண்ணாபல்கலைக்கழகம் நாகர்கோவில், ஸ்கேட் பொறியியல் கல்லூரி சேரன்மாதேவி, அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி, சென்னை ஆகிய இடங்களில் 3 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

திருநெல்வேலி மண்டலம் சார்பில் நடந்த மாணவர்களுக்கான இறுதிச்சுற்று போட்டியில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவி அஸ்வதி மோகன் (ME இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்) கலந்து கொண்டார். அவர் சைபர் பாதுகாப்பு (CYBER SAFE) என்ற தலைப்பில் சைபர் குற்றங்களை தடுப்பது குறித்தும், இணையதள நெட்வொர்க்கில் ஏற்படும் இடர்பாடுகளை களைவது, பாதுகாப்பது மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது போன்ற அம்சங்களை கண்டுபிடித்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த சாதனை படைத்த மாணவி அஸ்வதி மோகனுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இதற்கு பெருமுயற்சி மேற்கொண்ட பொதுமேலாளர்கள் ஜெயகுமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், தொழில்முனைவோர் பயிற்சி துறை இயக்குநர் லூர்டஸ் பூபாலராயன், கணிப்பொறி துறை பேராசிரியர் அரவிந்த் சுவாமிநாதன் மற்றும் பரிசு பெற்ற மாணவி அஸ்வதி மோகன் ஆகியோரை கல்லூரி நிறுவனர், முனைவர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண் பாபு ஆகியோர் பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!