நெல்லையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிலுவைப்பாதை ஊர்வலம்

நெல்லையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு  சிலுவைப்பாதை ஊர்வலம்
X

நெல்லையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தவக்கால ஊர்வலம் நடைபெற்றது. 

ஈஸ்டர் பண்டிகை இயேசு கிறிஸ்து சிலுவையில் பட்ட துன்பங்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை ஊர்வலம்.

நெல்லையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தவக்கால ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிலுவையை சுமந்த படி சென்றனர்.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஈஸ்டருக்கு முன்னதாக 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவ காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி மார்ச் 2-ஆம் தேதி சாம்பல் புதன் உடன் துவங்கியது. தவக்காலம் இந்தத் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகையின் ஒரு பகுதியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் பட்ட துன்பங்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் பங்கேற்ற சிலுவைப்பாதை ஊர்வலம் நெல்லையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் ஆலய பங்கு மக்கள் சார்பாக நடைபெற்ற சிலுவைப்பாதை ஊர்வலம் ஆனது புனித சவேரியார் ஆலயத்தில் துவங்கி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கம் வழியாக மகாராஜா நகரில் உள்ள யூதா ததேயு ஆலயத்தில் முடிவடைந்தது. இந்த தவக்கால ஊர்வலத்தின் போது கிறிஸ்து இயேசு சிலுவை சுமந்த துன்பங்கள் குறித்த பாடல்களை பாடியபடி சென்ற ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?