நெல்லையில் பாேக்குவரத்திற்கு இடையூறாக சுற்றிய மாடுகள்: மாநகராட்சி அதிரடி

நெல்லையில் பாேக்குவரத்திற்கு இடையூறாக சுற்றிய மாடுகள்: மாநகராட்சி அதிரடி
X

நெல்லையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிய 50 மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர்.

நெல்லையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிய 50 மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து கோசாலையில் ஒப்படைப்பு.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும்,போக்குவரத்திற்கும் இடையூறு சாலைகளில் சுற்றி திரிந்த 50 மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர். மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் அதிரடி நடவடிக்கை.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்படும் என நெல்லை மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் தெரிவித்து இருந்தார்.

இதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோசனை படி மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் பிடிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் உதவி ஆணையாளர் (பொ) லெனின் சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் தலைமையில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றி திரிந்த 50 மாடுகள் பிடிக்கப்பட்டு அருகன்குளம் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்