நெல்லையில் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்
நெல்லையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தியாவில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செயல்படுத்துவதன் காரணமாக இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து போலியோ நோய் தாக்கம் இல்லாமல் உள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இனிவரும் காலங்களிலும் இந்தியாவில் போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து ஒரே தவணையாக 27.02.2022 ஞாயிற்றுகிழமை சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் இம்முகாமின் மூலம் 135174 குழந்தைகள் பயனடைவார்கள். கிராம மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள, பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும், இடம்பெயர்ந்து வாழும் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் மற்றும் செங்கல் சூளைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், மேலும் புறவழிச்சாலை, சுங்கச்சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமணைகள் ஆகியவற்றிலும் மொத்தம் 918 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது,
மேற்கண்ட மையங்களில் 0 முதல் 5 வயதுக்குட்பட்ட சுமார் 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 27.02.2022 அன்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு பின்வரும் 7 நாட்களும் பணியாளர்கள் வீடுவீடாக சென்று பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும், இம்முகாமிலும் அவர்களுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்மையங்களில் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் 442 பணியாளர்களும் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 60 பேர்களும் சத்துணவுப் பணியாளர்கள் 1786 நபர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் 1480 பேர்களும் மொத்தம் 3768 பணியாளர்கள் நமது மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து பணியாற்றுகின்றனர்.
இது தவிர இதர அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்கள் ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்புடன் முகாம்கள் நடைபெற உள்ளது. ஆகவே பொதுமக்கள் தாய்மார்கள் அனைவரும் தங்களுடைய 5 வயதிற்குட்ப்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு அழைத்துச் தங்களுடைய குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து பெற்றுக் கொள்ளுமாறும், போலியோ இல்லாத உலகம் படைப்பதற்கு முழு ஒத்துழைப்பு தந்து தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக செயல்பட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.கிருஷ்ணலீலா, மாநகர் நகர் நல அலுவலர் மரு.ராஜேந்திரன், துணை இயக்குநர் (குடும்ப கட்டுபாட்டு) மரு.ராமநாதன், வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu