டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர் களுடன் காவல்துறை ஆணையாளர் ஆலோசனை
பாளையங்கோட்டையில் டாஸ்மாக் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்திய காவல் ஆணையர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் என்.கே.செந்தாமரைக் கண்ணன் தலைமையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நெல்லை மாநகர பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், கடைக்கு மதுபானம் வாங்க வரும் நபர்களை கண்காணிக்க சிசிடிவி கேமராகளை பொருத்துமாறும், அதிக அளவிலான மதுபானங்களை வாங்கி செல்லும் நபர்களை பற்றிய தகவலை காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
பெரும் தொகை பணத்தை கொண்டு செல்லும் போது காவல்துறையின் உதவியுடன் கொண்டு செல்லலாம் என்று ஆலோசனை வழங்கினார்கள். இதில், சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் டி.பி. சுரேஷ் குமார், குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் கே.சுரேஷ்குமார், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிறைச்சந்திரன் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்கள் 32 பேர் கலந்து காவல்துறை ஆணையாளர் கூறிய விதிமுறை, அறிவுரைகளை கேட்டுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu