ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச் சீட்டுகளை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச் சீட்டுகளை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்
X
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குச்சீட்டுகளை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குச்சீட்டுகளை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டு தெரிவித்ததாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 6,73,8 68 பேர் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வாக்கு சீட்டுகள் 8,25, 500 எண்ணம் மாநில தேர்தல் ஆணையத்திடம் இருந்து முன்பே பெறப்பட்டு இருப்பில் உள்ளது. கூடுதலாக இன்று மாநில தேர்தல் ஆணையத்திடம் இருந்து 1/61,200 கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தலுக்குறிய வெள்ளை நிறம் வாக்குச்சீட்டுகள் 8,22, 200 மற்றும் ஊதா நிறத்திலான வாக்குச்சீட்டுகள் 3,00, 400 உள்ளது. தேவையான வாக்குச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதல் கட்ட தேர்தல் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 9ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் தபாலில் வாக்களிக்க அவர்கள் வாக்கு எந்த ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. அந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் படிவம் 15 பூர்த்தி செய்து 2- 10 -2021குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் வாக்கு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 05-10-2021குள் தபால் மூலம் நான்கு வகையான தேர்தலுக்கு உரிய வாக்குச்சீட்டுகள் படிவம் 16 இல் தேர்தல் பணி சான்று மற்றும் தேர்தல் அலுவலர் அளிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 17 ஆகியவை அனுப்பி வைக்கப்படும். தபால் மூலம் வாக்குச்சீட்டு பெறுபவர்கள் தங்களின் வாக்கினை செலுத்தி நான்கு வகையான தேர்தலுக்கான படிவங்கள் உறுதிமொழி (படிவம் 17) நான்கில் பூர்த்தி செய்து சுய ஒப்பமிட்டு வாக்குச்சீட்டுகளை அதற்குரிய தனித்தனி உறையில் வைத்தும், படிவங்கள் 16 மற்றும் 17 (4 எண்ணம்) ஆகியவற்றுடன் பெரிய உறையில் வைத்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியில் செலுத்தி விடலாம். அல்லது அஞ்சல் வழியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் காலை 8 மணிக்கு முன்பாக கிடைக்கும் வகையில் அனுப்பிட வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!