குடியரசுதின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை பறக்க விட்டார்

குடியரசுதின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை பறக்க விட்டார்
X

குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தும் கலெக்டர் விஷ்ணு 

குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றி 10 பயனாளிகளுக்கு ரூ 4 லட்சத்து 41 ஆயிரத்து 748 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தேசியக்கொடியை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு ஏற்றி வைத்தார்.

இதைத்தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மூவர்ண பலன்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பறக்கவிட்டார். பின்னர் 91 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். 108 காவலருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 222 ஊழியர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. 10 பயனாளிகளுக்கு ரூபாய் 4 லட்சத்து 41 ஆயிரத்து 748 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக இந்த குடியரசு தின விழாவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை .

Tags

Next Story