GovTechThon போட்டிகளுக்கான பயிற்சி: வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

GovTechThon போட்டிகளுக்கான பயிற்சி: வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
X

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் GovTechThon போட்டிகளுக்கான பயிற்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வே.விஷ்ணு வழங்கினார்.

நெல்லையில் GovTechThon போட்டிகளுக்கான பயிற்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் GovTechThon போட்டிகளுக்கான பயிற்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.7.50 இலட்சம் மதிப்பில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் GovTechThon போட்டிகளுக்கான பயிற்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.7.50 இலட்சம் மதிப்பில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இன்று (30.04.2022) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு பேசியதாவது:- தொழில்துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புத்தொழிலில் ஈடுபட விரும்புவர்களுக்கு "ஸ்டார்ட்ப் தமிழ்நாடு" நிறுவனம் மூலம் உதவிகளை செய்து வருகிறது. இதன் அடிப்படையில் "ஸ்டார்ட்ப் தமிழ்நாடு" நிறுவத்துடன் இணைந்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் புத்தொழில் புரிய வாய்ப்புள்ளவர்களை கண்டறியும் வகையிலும், அரசுத் துறைகளில் கணினியின் செயல்பாடுகளை மேலும் அதிகரிக்கும் வகையிலும் கௌவ்டெக்தான் (GovTechThon) என்ற புதிய போட்டிகளை கடந்த டிசம்பர் மாதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்.

உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டறிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் செயலி, தனி நபர்களின் சமூக, பொருளாதார, கல்வித் தகுதிகள் ஆகிய விபரங்களின் அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நலத் திட்டங்களை எளிதாக பட்டியலிட்டு கொடுக்கும் வகையிலான ஒரு செயலி, பொது மக்களின் சுகாதர வலையமைப்பின் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளை வகையிலான அமைப்பு மற்றும் திருநெல்வேலி வண்ணார்பேட்டை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய புதிய வகையிலான தீர்வுகள் ஆகிய நான்கு போட்டிகளுக்கும் படைப்புகள் கிடைக்கப்பட்டன. 05.03.2022 அன்று அண்ணாமலை ஒட்டலில் நடைபெற்ற போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு கட்ட தேர்வுகளை கடந்து இன்று திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து தரவரிசையில் முன்னனியிலுள்ள 12 குழுக்களுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றது.

"ஸ்டார்ட்அப் என்றழைக்கப்படும் புத்தொழிலில் ஈடுபட விரும்பும் கல்லூரி மாணவ, மாணவியரை ஊக்கும்விக்கும் வகையில் தமிழக அரசு திருநெல்வேலியை தென் மண்டல மையமாக வைத்து செயல்பட ஆணையிட்டுள்ளது. விரைவில் புதிய மையம் செயல்பாட்டிற்கு வரும். அப்போது இப்பகுதியிலுள்ள பள்ளி, கல்லூரியைச் சார்ந்த அனைத்து துறை மாணவ, மாணவியருக்கும் புத்தொழில் தொடங்க அவர்களுக்குத் தேவையான அனைத்து பயிற்சிகளும், வழிகாட்டுதலும் எளிதாக கிடைக்கும். இந்த புதிய வசதியினை அனைத்து மாணவ மாணவியரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் அரசினர் தொழில்நுட்ப கல்லூரி, குவாண்டானிக்ஸ், டெஸ்ட்ராம் ஆகிய மூன்று குழுக்களுக்கு தலா ரூபாய் 1 லட்சம் பரிசுத் தொகையும், ஸ்ரீஜெயந்திரா அலுமினி, டிரையாட்கூப் ஆகிய இரண்டு குழுக்களுக்கு தலா ரூபாய் 70 ஆயிரம் பரிசுத் தொகையும், பிரான்ஸிஸ் சேவியர், பண்ணாரி அம்மன் கல்லூரி, ஸ்ரீஜெயந்திரா அலுமினி, விஸ்டேல், சவிதா பள்ளி ஆகிய ஐந்து குழுக்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் பரிசுத் தொகையும், மொசிரோ கம்பெனிக்கு ரூபாய் 30 ஆயிரம் என மொத்தமாக ரூபாய் 7.50 லட்சத்திற்கான பரிசுத் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

.இந்நிகழ்ச்சியில், சிறப்பு வருவாய் அலுவலர் சுகன்யா ராஜ்குமார், அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் செண்பகவிநாயக மூர்த்தி, திருநெல்வேலி அரசு மருத்துமனை மருத்துவகல்லுரி துணை முதல்வர் டாக்டர் சாந்தாராம், தேசிய தகவலியல் மைய அலுவலர்கள் தேவராஜன், ஆறுமுகநயினார், போக்குவரத்து துணை ஆணையாளர் முத்தரசு, உணவு பாதுகாப்பு அலுவலர் சசிதீபா, மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார், வட்டாட்சியர்கள் சண்முகசுப்பிரமணியன், செல்வம், ரகுமத்துல்லா, மகாத்மா காந்தி தேசிய உறுப்பினர் வரதராஜ், பிராண்ட் மேக்ஸிமா நிறுவன விக்னேஷ் அண்ணாமலை, கபீப் நிறுவன ஜீவிதா போன்ற பல்வேறு துறை நிபுணர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது