நெல்லை அரசு அருங்காட்சியத்தில் குழந்தைகள் தின சிறப்பு ஓவிய போட்டி
நெல்லை அருங்காட்சியத்தில் குழந்தைகள் நாள் ஓவியப் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை அருங்காட்சியத்தில் குழந்தைகள் நாள் ஓவியப் போட்டி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் 133-ஆவது பிறந்த நாள் விழா நெல்லை அருங்காட்சியகத்தில் இன்று 14.11.2021- காலையில் சிறப்பாக நடத்தப்பட்டது.
விழாவில்,1-முதல் 8-வரை படிக்கும் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களிலிருந்து 200நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் போட்டியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமை தாங்கினார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா குழந்தைகள் நாள் சிறப்புரை ஆற்றினார்.
திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கோட்டப் பொறியாளர் ஆனையப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றினார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்கள் 1-3 ஆம் வகுப்பு வெரோனிகா பெல் மேல்நிலை பள்ளி, அர்ஜுன் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி, முகிலா சங்கர் நகர் ஜெயேந்திரா பள்ளி. 4,5,6 வகுப்பு முத்து சீனிவாசன், ஜெயேந்திர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி, கமலேஷ் சங்கர்நகர் ஜெயேந்திரா மேல்நிலைப்பள்ளி, ஆஷிகா புஷ்பலதா மெட்ரிக் பள்ளி. 7-8 வகுப்பு வெரோனிகா அற்புதலீலா, பெல் பள்ளி, ஷோபனா, அரசு மேல்நிலைப்பள்ளி, கருங்குளம். செய்ந்தர்யா அனிஷா, அரசு மேல்நிலைப்பள்ளி, கருங்குளம் ஆகிய குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.
போட்டிகளுக்கு நடுவர்களாக இசக்கி, சுரேஷ், ஆலப்பநாதன் ஆகியோர் பணியாற்றினர். நிறைவாக கலையாசிரியர் சொர்ணம் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu