அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்

அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்
X

நெல்லை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிடிவி தினரகனின் பிறந்தநாள் விழா சிறப்பு பூஜை கோயிலில் நடைபெற்றது.

நெல்லையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நெல்லையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம். திருநெல்வேலி மாநகர் பாளையங்கோட்டை கட்சியினர் ஏற்பாட்டில் பாளையங்கோட்டை மேலவாசல் முருகன் கோவிலில் மாவட்ட பொறுப்பாளர் நெல்லை பரமசிவம் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை பகுதி செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைர் ஹமிம் பாய், முன்னாள் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஆவின் அண்ணாசாமி,

பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட மன்ற செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து, மாவட்ட மாணவரணி செயலாளர் மகேஷ் கண்ணன், மேலப்பாளையம் பகுதி கிழக்கு செயலாளர் டாக்டர் ஆசீர்வாதம்,

பாளை ஒன்றிய செயலாளர் அல்லல் காத்த, மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்டர் தாமஸ் நைனார். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பரமசிவம், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பாலாஜி, தருவை வீரபத்திரன், சின்னத்துரை, மாவட்ட மகளிரணி எஸ்தர், ஒன்றிய மகளிரணி லட்சுமி, கவிதா, வட்ட செயலாளர் அபிசரவணன், பேச்சிமுத்து மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்