நெல்லையில் மொழிப்போர் தியாகிகள் நூல் வெளியீட்டு விழா

மொழிப்போர் தியாகிகள் நூல் வெளியீடு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நூலகர் முனைவர் ப.பாலசுப்பிரமணியன் எழுதிய "மொழிப்போர் தியாகிகள்" நூலை திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் வெளியிட்டனர்.
திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையேற்று நூலை வெளியிட, முதல் பிரதியை வழக்கறிஞர் ஜெ.செல்வசூடாமணி பெற்றுக் கொண்டார். தமிழ் மொழிக்காக போராடிய, அதன் உரிமையை நிலைநாட்ட தங்களை அர்ப்பணித்த தியாகிகள் பலருடைய வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளதாக நூலாசிரியர் முனைவர் ப.பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டார்.
தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்பணித்து போராடிய தியாகிகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் விதமாக இந்த நூலை எழுதி வெளியிட்ட நூலாசிரியரின் முயற்சியை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக மாநில தொண்டரணி துணைச்செயலாளர் ஆவின் ஆறுமுகம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முருகன், கணேஷ்குமார் ஆதித்தன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ்.சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu