புத்தகத் திருவிழா: புத்தகம் வாசிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்திய ஆட்சியர்

புத்தகத் திருவிழா: புத்தகம் வாசிக்கும் மாணவர்களை  ஊக்கப்படுத்திய ஆட்சியர்
X

உலக சாதனைக்காக 11 நாள் புத்தகம் தொடர் வாசிப்பு நிகழ்வில் புத்தகம் வாசிக்கும் மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

புத்தக திருவிழாவில் உலக சாதனைக்காக தொடர் புத்தகம் வாசிக்கும் மாணவர்களை ஆட்சியர் விஷ்ணு நேரில் சந்தித்து பாராட்டினார்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழா 2வது நாள் சிறப்பாக நடைபெற்றது. இதில் உலக சாதனைக்காக 11 நாள் புத்தகம் தொடர் வாசிப்பு நிகழ்வில் புத்தகம் வாசிக்கும் மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் 2வது நாள் நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு புத்தக விற்பனை நிலையங்களுக்கு சென்று புத்தகங்கள் வாங்கினார். மேலும் இல்லம் தேடி கல்வி அரங்கம் மற்றும் அனைத்து பகுதிகளை பார்வையிட்டு புத்தக திருவிழாவில் வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து உலக சாதனைக்காக 11 நாள் புத்தகம் தொடர் வாசிப்பு நிகழ்வில் புத்தகம் வாசிக்கும் மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு நேரில் சந்தித்து பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழா 2வது நாளில் கலை நிகழ்ச்சிகள், நூல் வெளியிடுதல், காகித பயிற்சி, மண்பாண்டங்கள் தயார் செய்யும் பயிற்சி, கலை வடிவ பயிற்சி நடைபெற்றது. இதில் கலைபண்பாட்டுத்துறையின் சார்பில் கலை நிகழ்ச்சிகளும், மாணவி மு.சுடாமணி எழுதிய "சூடாமணி சிறுகதைகள்" நூலினையும், கவிஞர் பாபு பிரித்விராஜ் எழுதிய "இம்மொழி பெருங்கூடு" நூல்களை வெளியீடப்பட்டது. கருத்தரங்கம் இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் கா.பிச்சுமணி தலைமையில் திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சி சுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது. மாணவ, மாணவியர்களுக்கு காகிதம் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் எவ்வாறு செய்வது குறித்தும், மண்பாண்டங்கள் தயார் செய்வது குறித்தும், மற்றும் கலை வடிவ பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புத்தகங்களும் வெத்தகங்கள் நாவலாசிரியர் ஆதவன் தீட்சண்யா, தமிழ் அறம் முனைவர் இரா.காமராசு, நானும் என் எழுத்தும் எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தனி அரங்கில் உலகத் திரைப்படங்கள் திரையிடல் கருத்துரையை இயக்குநர் பிராங்களின் ஜேக்கப் வழங்கினார். மேலும் பெண்ணெழுத்து மெல்லினமா? வல்லினமா? என்ற தலைப்பில் பேராசிரியர் அனுசுயா, செல்வராணி, இராஜேஸ்வரி, கோமதி, பேராசிரியர் ஜெயமேரி,.மலர்விழி ஆகியோர் பெண்களே பங்கேற்ற பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டிமன்ற நடுவராக கவிதாஜவஹர் செயலாற்றினார். மேலும் அறிவியல் மையத்தின் சார்பில் தொலைநோக்கின் மூலம் வான்வெளி பார்ப்பதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் தி.முத்துலெட்சுமி நன்றியுரையாற்றினார்.


Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு