தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி பேராயராக பர்னபாஸ் தேர்வு

தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி பேராயராக பர்னபாஸ் தேர்வு
X

தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 16வது பேராயராக அருள்திரு. ARGST பர்னபாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பிரதம பேராயர் இன் ஆணையர் சந்திரசேகரன் பத்திரிகையாளரிடம் தெரிவித்ததாவது:-

தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 16வது பேராயராக அருள்திரு. ARGST பர்னபாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி திருமண்டலத்தின் பேராயர் பெயர் பட்டியல் தேர்வு 10.09.2021ம் தேதி அன்று நடைபெற்றது. இப்பெயர் பட்டியல் தேர்வில் அருள்திரு ARGST பர்னபாஸ், அருள்திரு A. பீட்டர் தேவதாஸ், அருள்திரு. TP. சுவாமிதாஸ் ஆகிய மூவர் தெரிவு செய்யப்பட்டனர்.இன்று தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் பேரருட்திரு. தர்மராஜ் ரஸாலம் தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் அருள்திரு.ARGST பர்னபாஸ் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அருள்திரு. ARGST பர்னபாஸ் தற்சமயம் பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் குருவானவராக பணியாற்றி வருகின்றார். அவரது துணைவியார் ஜாய் பர்னபாஸ்க்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளார்கள்.

திருநெல்வேலி திருமண்டலத்தின் 16வது பேராயராக அருள்திரு ARGST பர்னபாஸ் நாளை மதியம் 2.00 மணியளவில் பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் தென்னிந்திய திருச்சபையில் பிரதம பேராயர் பேரருட்திரு.தர்மராஜ் ரஸாலம் தலைமையில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் அருட்பொழிவு பெறுகின்றார். அதைத் தொடர்ந்து 6.00 மணிக்கு பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

அருட்பொழிவு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், திருநெல்வேலி திருமண்டலத்தின் இறைமக்கள் செயலர் D. ஜெயசிங் மற்றும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் S. ஞானதிரவியம் ஆகியோர் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய பேராயரின் அருட்பொழிவு அனைத்து நிகழ்ச்சிக்கும் திருச்சி-தஞ்சை திருமண்டலத்தின் பேராயரும், திருநெல்வேலி திருமண்டலத்தின் பொறுப்பு பேராயருமான பேரருட்திரு. முனைவர் D.I சந்திரசேகரன் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகின்றது. நெல்லை திருமண்டலத்தை சார்ந்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்

D. ஜெயசிங் இறைமக்கள் செயலர், S. ஞானதிரவியம் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர், பேரருட்திரு. முனைவர் த. சந்திரசேகரன், பிரதம பேராயரின் ஆணையர், துணைத்தலைவர் சுவாமிதாஸ், பொருளாளர் ஏடிஜேசி மனோகர் பாஸ்கர், குருத்வ செயலாளர் கனகராஜ் உட்பட திரு மண்டலத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture