நெல்லையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான 'ஆவாஸ் சாப்ட்வேர்' பயிற்சி முகாம்
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக 'ஆவாஸ் சாப்ட்வேர்' நான்கு மாவட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக 'ஆவாஸ் சாப்ட்வேர்' நான்கு மாவட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம். எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
தமிழக அரசு வழங்கியுள்ள ஆவாஸ் சாப்ட்வேரை பயன்படுத்தி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு எவ்வாறு பேச்சுப்பயிற்சி அளிப்பது என்பது குறித்த அரசின் சிறப்பு ஆசிரியர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமாரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் மனவளர்ச்சி குழந்தைகளுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கற்றல் திறனையும், ஆவாஸ் மூலம் மற்றவர்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஐ.ஐ.டி முன்னாள் மாணவர் ஒருவர் (இன்வென்ஷன் லேப்ஸ் இன்ஜினியரிங் தயாரிப்புகள் பிரைவேட் லிமிடெட், Invention Labs Engineering products Limited, chennai) ஆவாஸ் சாப்ட்வேர்-ஐ கண்டுபிடித்துள்ளார். இந்த சாப்ட்வேரை தமிழக அரசு மாற்றுத் திறனாளி நலத்துறை மூலம் வருடந்தோறும் சிறப்பு பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது.
சர்வதேச அளவில் பயன்பாட்டில் இருக்கும் உயர்தரமான இந்த சாப்ட்வேர் இந்தியர்களால் முழுக்க முழுக்க இந்தியர்களால் தயாரிக்கப்பட்டது. இது குறித்த பயிற்சி கருத்தரங்கு நெல்லை வண்ணாரப்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி தொழில் முனைவோர் துறை ஏற்பாடு செய்தது. இதில் 4 மாவட்டத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் அவர்களுக்கு ஆவாஸ் செயலியை உபயோகித்து குழந்தைகளுக்கு எப்படி பயிற்சி அளிக்க வேண்டும், குழந்தைகள் பிறருடன் எளிதில் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள அவர்களை எப்படி பயிற்றுவிப்பது, அவர்களின் கற்கும் திறனை அதிகரிப்பதற்கு ஆவாஸ் சாப்ட்வேர் மூலம் எளிமையான முறையில் எப்படி பயிற்சி அளிப்பது போன்றவை பற்றி ஒருநாள் பயிலரங்கத்தில் சிறப்பாசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய இன்வென்ஷன் லேப்ஸ் நிறுவனத்தினர், ஒரு குழந்தை 2 வயது ஆகும்போதே மனவளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும், அந்த வயதில் இருந்தே குழந்தைகளுக்கு வழங்கப்படும் முறையான பயிற்சி மூலம், அவர்களது பேசும் திறனை அதிகப்படுத்த முடியும், மேலும் அவர்களது தேவையை நம்மிடம் எளிதில் தெரிவிக்கும் கம்யூனிகேஷன் (Communication) திறனையும் ஆவாஸ் சாப்ட்வேர் மூலம் வெற்றிகரமாக வளர்க்க முடியும், எந்த வயதிலும் அவர்களை நன்றாக பயிற்றுவிப்பது சாத்தியமே என்பது போன்ற விஷயங்களை விவரித்து கூறினார்.
இந்த கருத்தரங்கில் சிறப்பு ஆசிரியர்களுக்கு மன வளர்ச்சி குழந்தைகளை பழக்குவது குறித்து பல்வேறு ஆக்கபூர்வமான உத்திகளையும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த புதிய சாப்ட்வேர் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயனடைவார்கள். கல்லூரியின் தொழில் முனைவோர் துறை சார்பில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பொதுமேலாளர்கள் முனைவர் K.ஜெயக்குமார், S.கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் V,வேல்முருகன், வளாக மேலாளர் j.சகாரியா கேபிரியல், முனைவர் லூர்தஸ் பூபாலராயன் உள்ளிட்டோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் S.கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் C.அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu