நெல்லை-சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து இணையவழி கருத்தரங்கு
சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து இணையவழி கருத்தரங்கு
நெல்லை அரசு அருங்காட்சியகம்,நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, என் பி என் கே கலை பண்பாடு மன்றம் இணைந்து சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு நாளினை முன்னிட்டு போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இக்கருத்தரங்கில் நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சத்திய வள்ளி அனைவரையும் வரவேற்றார். முதுநிலை சிவில் நீதிபதி பி.வி. வஷித் குமார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைமையுரை ஆற்றினார். அவரது உரையில் திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் பி. பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.
திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் ராஜராஜன் தனது சிறப்புரையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும் என்றும், இந்த போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை உணர வேண்டும் என்றும், இந்த போதைப் பழக்கம் உடல்நிலையை எவ்வாறெல்லாம் பாதிக்கப் படுகின்றது. போதைப் பழக்கத்துக்கு உட்படுத்தினால் சமுதாயத்தில் அவர்களை மற்றவர் பார்க்கும் தவறான கண்ணோட்டங்கள் பற்றியும் போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார்.
மேலும், நிகழ்வில் முதுநிலை வழக்கறிஞர் பிரபாகரன் பேசினார். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu