நெல்லையில் உலக மனநல நாளை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

நெல்லையில் உலக மனநல நாளை  முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்ற மன நல விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சமுதாயத்தில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட நீதிபதி நசீர் அகமது தெரிவித்தார்

நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பல்வேறு தனியார் அமைப்புகளுடன் இணைந்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று தனியார் மனநலம் மையத்துடன் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்தியது.

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணியை மாவட்ட நீதிபதி நசீர் அகமது தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:.உலக மனநல தினத்தை முன்னிட்டு இந்த சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலே பைத்தியக்கார்ர்கள் என நினைக்கிறோம். ஆனால் பெரும்பாலான மனநோயாளிகளை உரிய அன்பு ஆதரவு சிகிச்சை இருந்தால் 70% குணப்படுத்த முடியும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சமுதாயத்தில் கவுரவமாக நடத்தப்பட வேண்டும். மனநலம் பாதித்தவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்து வருகிறது என்றார் நீதிபதி நசீர்அகமது.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு