பாலியல் வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

பாலியல் வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
X
பாலியல் பலாத்காரம் வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை, 10 ஆயிரம் அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள பனையங்குறிச்சியில் ஆசை வார்த்தைக்கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு பரபரப்பு.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள பனையங்குறிச்சி கிராமத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 17 வயது பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கதிரேசன் என்பவர் ஆசை வார்த்தைக்கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பெண் கொடுத்த புகாரின் பேரில் பாப்பாகுடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கதிரேசன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அன்புச்செல்வி குற்றம் சாட்டப்பட்ட கதிரேசனுக்கு 20 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!