நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு தொல்லியல் பயிலரங்கம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு தொல்லியல் பயிலரங்கம்
X

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ராணி அண்ணா கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவிகளுக்கு தொல்லியல் பயிலரங்கம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் ராணி அண்ணா கல்லூரி மாணவிகளுக்கு தொல்லியல் தொடர்பான பயிலரங்கம்.

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ராணி அண்ணா கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவிகளுக்கு தொல்லியல் பயிலரங்கம் நடைபெற்றது.

இப்பயிலரங்கத்தில் நெல்லை அரசு அருங்காட்சியகத் திலுள்ள அரும் பொருட்கள் பாதுகாப்பு முறைகள் பற்றி காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மாணவிகளுக்கு இளவேலங்கால் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட நடுகற்கள் பற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாணவ- மாணவிகள் மரபு நடைபயணமாக கிருஷ்ணாபுரம் கோயில் மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டிருந்த தொல்லியல் ஆய்வாளர் ஏதீஷ்குமார் அகழாய்வு பற்றி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இப்பயிலரங்கம் மற்றும் மரபுநடை பயணத்தில் ராணி அண்ணா கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர்கள் உமாதேவி, சுதாமதி, சகாயமேரி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!