தேசிய மாணவர் படையின் 3வது பட்டாலியன் பிரிவினருக்கு வருடாந்திர பயிற்சி முகாம்

தேசிய மாணவர் படையின் 3வது பட்டாலியன் பிரிவினருக்கு வருடாந்திர பயிற்சி முகாம்
X

நெல்லையில் நடைபெறும் பயிற்சி முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

நெல்லையில் தேசிய மாணவர் படையின் 3வது பட்டாலியன் பிரிவினருக்கு வருடாந்திர பயிற்சி முகாம் தொடங்கியது.

நெல்லையில் தேசிய மாணவர் படையின் 3வது பட்டாலியன் பிரிவினருக்கு வருடாந்திர பயிற்சி முகாம் தொடங்கியது. முதல் கட்டமாக நடைபெறும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் 9 கல்லூரிகளைச் சேர்ந்த 160 மாணவிகள் பங்கேற்றனர்.

தேசிய மாணவர் படையில் (என்சிசி) பங்கேற்றுள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வருடாந்திர பயிற்சி முகாம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 3வது பட்டாலியனை சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் நெல்லையில் தொடங்கியது. முதல் கட்டமாக மூன்று நாட்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது.

பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒன்பது கல்லூரிகளைச் சேர்ந்த 160 மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு லெப்டினன்ட் கர்னல் தன்வர் தலைமையில் துப்பாக்கி சுடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. ஒவ்வொரு மாணவிகளுக்கும் தலா ஐந்து குண்டுகள் வழங்கப்பட்டு குறிப்பிட்ட இலக்கை தாக்குவதற்கு ஐந்து முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. மூன்று நாள் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கு பிறகு ஆயுதங்கள் கையாள்வது குறித்தும், அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

இறுதியாக நடைபெறும் தேர்விலும் மாணவிகள் பங்கேற்க உள்ளனர். வரும் 3ம் தேதி வரை மொத்தம் 7 நாட்கள் இந்த பயிற்சி முகாம் நடைபெறும் என தேசிய மாணவர் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தற்போது கொரனோ காலக்கட்டம் என்பதால் முகாமில் பங்கேற்ற மாணவிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என பரிசோதித்த பிறகே முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

Tags

Next Story