நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து

நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து
X

நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் காவல் வாகனங்களையும், காவலர்களின் உடை பொருட்களை ஆய்வு செய்தார்.

நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார்.

நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து நிகழ்ச்சியில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட காவல் ஆணையாளர்.

திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கூட்டு கவாத்து பயிற்சி கடந்த 18-04-2022 முதல் 05-05-2022 இன்று வரை நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடல்திறன், ஆயுதங்களை கையாள்வது, கலவர கூட்டங்களை தடுப்பது, முக்கிய பிரமுகர் பாதுகாப்பு மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டு கவாத்து பயிற்சியின் நிறைவு நாளான இன்று 05-05-2022 ம் தேதியன்று, வருடாந்திர கவாத்து (Demobilization parade) அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் கவாத்தை ஆய்வு செய்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

உடன் நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் T.P.சுரேஷ் குமார், திருநெல்வேலி மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் த பிறைச்சந்திரன், திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் முத்தரசு, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் டேனியல் பிரபாகரன், வாகன பிரிவு காவல் ஆய்வாளர் ராணி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, மேலும் காவல் வாகனங்களையும், காவலர்களின் உடை பொருட்களை ஆய்வு செய்தார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி