அண்ணாநகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு

அண்ணாநகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு
X

பாளையங்கோட்டை அண்ணாநகர் 36 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

பாளையங்கோட்டை அண்ணாநகர் 36 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அண்ணாநகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கு போட்டியிடும் பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டலத்திற்கு உட்பட்ட 36 வது வார்டில் அஇஅதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் அண்ணாநகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் வீடு வீடாக சென்று மாநகராட்சி தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி வாக்குகளை சேகரித்தார். அப்போது தன்னை வெற்றி பெறச் செய்தால் வார்டில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!