/* */

நெல்லையில் 7வது தேசிய கைத்தறி தினம்: சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை

நெசவாளர் முத்ரா கடன் திட்டத்திள் 20% மானியத்துடன் 8 நபர்களுக்கு தலா 50 ஆயிரமும், 2 நபர்களுக்கு தலா 25 ஆயிரமும் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

நெல்லையில் 7வது தேசிய கைத்தறி தினம்: சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை
X

7வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஒருநாள் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

7வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஒருநாள் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அன்று இந்தியனாக இரு இந்திய பொருள்களையே வாங்கு என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம். இதனை நினைவுகூறும் பொருட்டும் கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தும் பொருட்டும், அவர்களின் பெருமையை பறைசாற்ற இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெசவாளர்கள் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ஜவுளிகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தது. இவ்விழாவின்போது நெசவாளர் நல்வாழ்வு திட்ட உதவி தொகையாக நெசவாளர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 20% மானியத்துடன் 8 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம், இரண்டு நபர்களுக்கு தலா 25 ஆயிரமும், ஆக மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரம் கடன் ஆணைகள் வழங்கப்பட்டன. அனைவரும் கைத்தறி துணிகள் வாங்கி அணிய வலியுறுத்தப்பட்டது.

Updated On: 7 Aug 2021 10:51 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  7. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  9. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?