நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 5வது சித்தர் தின விழா
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 5வது சித்தர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 5வது சித்தர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 5வது சித்தர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. சித்தர் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்து பேசியதாவது:-
சித்த மருத்துவக்கல்லூரி கொரோனா தொற்றுக்காலத்தில் சிறப்பாக பணியாற்றியதாகவும், கொரோனா தொற்று முதலில் ஏற்பட்டபோது தடுப்பூசி இல்லாத நிலையில் தொற்றுக்கு சித்த மருந்துகள் சிறப்பான மருந்தகமாக செயலாற்றியது. மாணவ,மாணவியர்கள் சித்த மருத்துவத் துறையில் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவ துறை வளர்ச்சிக்கும், நாட்டில் நிலவும் நோய் தொற்று பரவலுக்கும் மருத்துவ துறை ஆராய்ச்சி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அகஸ்தியர் மலை அதிக மூலிகை வளங்களை கொண்டது.
சித்த மருத்துவம் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு அகஸ்தியர் மலைக்கு சென்று பார்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தை விரிவுபடுத்துவதற்கும், பல்வேறு வசதிகளுடன் எற்படுத்த தமிழக அரசிடம் அனுமதி பெற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். இங்கு நடைபெற்ற கருத்தரங்கு போல பல பன்னாட்டு கருத்தரங்குகள் பல நடத்த வேண்டும். கருத்தரங்கின் மூலம் மாணவ, மாணவிகள் தங்களுடைய அறிவு திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்.
.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், அரசு சித்தமருத்துவ கல்லூரி முதல்வர் மரு.திருத்தனி, துணை முதல்வர் பேராசிரியர் மரு.மனோகரன், சித்த மருத்துவ ஆராய்ச்சி அலுவலர்கள் மரு.சிவரஞ்சனி, மரு.ஹரிஹரமகாதேவன், மரு.சுபாஷ் சந்திரன் மற்றும் சித்த மருத்துவ அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu