/* */

நெல்லையில் நடந்த மாவட்ட சிலம்பாட்டப் போட்டியில் 350 மாணவ -மாணவிகள் பங்கேற்பு

சிலம்ப கலைக்கு விளையாட்டுத்துறையில் 3% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

HIGHLIGHTS

நெல்லையில் நடந்த மாவட்ட சிலம்பாட்டப் போட்டியில் 350 மாணவ -மாணவிகள் பங்கேற்பு
X

தமிழர் கலையான சிலம்ப கலைக்கு விளையாட்டுத்துறையில் முன்னுரிமை அளித்து 3% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருநெல்வேலி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசின் 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்திருந்தார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட அமெச்சூர் சிலம்பாட்ட கழகம் சார்பில் தமிழரின் வீர விளையாட்டான சிலம்ப கலைக்கு விளையாட்டுத்துறையில் முன்னுரிமை அளித்து 3% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம வ உ சி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் 350 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். கொரோனா பேரிடர் காரணமாக நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் 13 வகையான விளையாட்டுகளை விளையாடினர்.

சிலம்பம் மட்டுமின்றி வாள் வீச்சு, சுருள் வாள், மான் கொம்பு, வேல் கம்பு சுற்றுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் இந்திய அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட அமெச்சூர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் கூறும்போது:

விளையாட்டு துறையில் சிலம்ப கலைக்கு இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இப்போட்டியை மென்மேலும் வளர செய்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

Updated On: 19 Sep 2021 8:56 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா