திருநெல்வேலியில் - ஆரோக்கியம் தொடர்பான இணையவழி கருத்தரங்கு.
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய ஆரோக்கியம் தொடர்பான இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் மே 17ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது . நெல்லை அரசு அருங்காட்சியகமும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி விலங்கியல் துறையும், சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமர் மற்றும் சிவிக் ஆக்சன் குருப்பும் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் இணைந்து இன்று இணையவழி கருத்தரங்கு நடத்தினார்
இக்கருத்தரங்கில் சிட்டிசன் கன்ஸ்யூமர் மற்றும் பிபிகேக்சன் குரூப்பின் இயக்குனர் சரோஜா வரவேற்புரை ஆற்றினார். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் முகமது சாதிக் தலைமையுரை ஆற்றினார். நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி முன்னிலை உரை வழங்கினார். பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரியின் மேனாள் டீன் பத்மஸ்ரீ. சீர்காழி.சிவசிதம்பரம் தொடக்க உரை ஆற்றினார்.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி துணை முதல்வர் முனைவர் செய்யது முகமது காஜா வாழ்த்துரை வழங்கினார்.
திருநெல்வேலி அருணா இருதய சிகிச்சை மையத்தின் மூத்த ஆலோசகர் இதயவியல் மருத்துவர். அருணாச்சலம் உயர் ரத்த அழுத்தமும் அதன் விளைவுகளும் எனும் தலைப்பில் விரிவான விளக்கம் அளித்தார் அவரது உரையில் உயர் ரத்த அழுத்தத்தின் காரணங்களும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் ஹேமாமாலினி,உயர் ரத்த அழுத்த உணவு மேலாண்மை எனும் தலைப்பில் சிறப்புரையும் வழங்கினார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரி யின் விலங்கியல் துறை தலைவர் முனைவர் சித்தி ஜமீலா நிறைவுரை ஆற்றினார்.
திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் பொது செயலாளர் முனைவர் கோ. கணபதி சுப்பிரமணியன் நன்றியுரை வழங்கினார்.
இக்கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஆராய்ச்சி மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu