நெல்லையில் சிறார்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்: அமைச்சர் துவக்கி வைப்பு
ரெட்டியார்பட்டி கு.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை போக்குவரத்துதுறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தாெடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை போக்குவரத்துதுறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி கு.ரா.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை போக்குவரத்துதுறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், முன்னாள் சட்டமன்ற பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலையில் இன்று (03.01.2022) தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தமிழகம் முழுவதும் உள்ள 15 முதல் 18 வயதிலான பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து,திருநெல்வேலி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 11 கல்வி வட்டாரங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 309 பள்ளிகளில் 57,307 பள்ளி சிறார்களக்கு.தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக இன்று 51 பள்ளிகளில் 12,434 பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு 51 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், மற்றும் ஒரு தரவு உள்ளீட்டாளரும் உள்ளனர்.
மேலும், அவர்களுக்கு தனியாக கோவின் சாப்ட்வேரில் பதிவு செய்து சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கைகளும், அரசு மருத்துவமனையில் 160 படுக்கைகளும், கொரோனா சேவை மையங்களில் 150 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா தடுப்பூசிகள் 2,15,000 கையிருப்பில் உள்ளது. மாவட்டத்தில் வரும் காலங்களில் கொரோனா தொற்று எற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு 1000 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. போக்குவரத்துதுறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.ஜி.கிருஷ்ணலீலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் தங்கபாண்டியன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu