நெல்லை வாக்குச்சாவடிகளில் எஸ்பி மணிவண்ணன் ஆய்வு

நெல்லையில் கீழநத்தம் பஞ்சாயத்து வாக்குச்சாவடியில் மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 165 வாக்குச்சாவடி மையங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்காளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழநத்தம் வாக்குச்சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் திடீரென ஆய்வுக்கு வந்தார். அப்பொழுது வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மணிவண்ணன் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லையில் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெறுவதையொட்டி 2400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 621 வாக்குச்சாவடிகளில் 182 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. இதில் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகள் 15 என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு