நாங்குநேரி தெய்வநாயக பெருமாளுக்கு பங்குனி திருக்கல்யாண தோ் திருவிழா
நாங்குநோி தெய்வநாயகப்பெருமாளுக்கு பங்குனி திருக்கல்யாண தோ்த்திருவிழா நடைபெற்றது.
பிரசிதி பெற்ற திவ்யதேசங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் நாங்குநோி தெய்வநாயகப்பெருமாளுக்கு பங்குனி திருக்கல்யாண தோ்த்திருவிழா. ஏராளமான பக்தா்கள் கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் தோ் வடம் பிடித்து இழுத்தனா்.
திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் பாண்டிய நாட்டு தலமாகும். இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 7 சுயம்சத்ய ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் பல்வேறு உற்சவங்கள் ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு திருக்கல்யாண திருவிழா ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி மதுரகவி ஸ்ரீ வானமாமலை இராமானுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிரகத்துடன் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பெருமாள் தயாா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10ம் திருநாளான இன்று காலையில் ஸ்ரீவரமங்கை நாச்சியாா் சமேத ஸ்ரீ தெய்வநாயகப்பெருமாள் தோளுக்கிணியானில் தேருக்கு ஏழுந்தருளினாா்.
தொடா்ந்து வானமாமலை ஜூயா் சுவாமிகளுக்கு கோயில் மாியாதைகள் செய்யப்பட்டது. அலங்காிக்கப்பட்ட தங்கத் தேரை ஜீயா் சுவாமிகள் தோ் வடம் பிடித்தார். அதனை தொடா்ந்து ஆயிரக்கணக்கான ஊா்மக்கள் கோவிந்தா, கோபாலா என்ற கோஷங்களுடன் தேர்வடம் பிடித்து இழுத்தனா். தோ் சன்னதி தெரு மற்றும் நான்குரத வீதிகளில் வலம் வந்தது. விழாவினை வானுமாமலை மடத்தினா் செய்திருந்தனா்.
பங்குனி உத்திரத்திரத்தை முன்னிட்டு இன்று மாலை பெருமாள் தாயாா் மாலை மாற்றும் வைபவமும், மறுநாள் காலையில் திருக்கல்யாணம் மற்றும் இரவு பட்டணபிரவேசம் சிறப்பாக நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu