கொடுமுடியாறு அணை நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
நாங்குநேரி வட்டம் கொடுமுடியாறு அணை நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க கொடுமுடியாறு அணை நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் கொடுமுடியாறு அணை நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- திருக்குறுங்குடி கிராமம் களக்காடு வனப்பகுதிகுட்பட்ட பகுதியில் கொடுமுடியாறு, கோதையாறு ஆகிய இரண்டு ஆறு தாமரையாறில் இணைகிறது. கொடுமுடியாறு நீர்தேக்கத்திலிருந்து நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டாரங்களில் உள்ள வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துகால் ஆகியவற்றின் மூலம் பாசன பெறும் நேரடி பாசனம் 240.25 ஏக்கர் இதன் குளங்கள் வாயிலாக முறையாக பாசனம் 2517.82 ஏக்கர் மற்றும் வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3231.97 ஏக்கர் ஆகமொத்தம் 5781 ஏக்கர் நிளங்களுக்கு நடப்பாண்டு பிசான சாகுபடி செய்ய 08.11.2021 முதல், 07.03.2022 முடிய நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் 2021-22 ஆம் ஆண்டு பிசான சாகுபடிக்கு நீர் இருப்பை பொருத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நீர்தேக்கத்தின் மூலம் 44 குளங்கள் வாயிலாக 5781 ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகிறது. இந்நீர்தேக்கத்தின் மூலம் நாங்குநேரி வட்டத்தில் 6 கிராமங்களும், இராதாபுரம் வட்டத்தில் 10 கிராமங்களும் ஆக மொத்தம் 16 கிராமங்கள் பயனடைந்து வருகிறது. மேலும் நீர்தேக்கத்திலிருந்து எதிர் வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லையென்றால் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சிமுறையில் வழங்கபடும் எனவும், நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடன் உதவிகளை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களின் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கான கடன் உதவிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிற்றாறு வடிநிலகோட்ட செயற்பொறியாளர் சிவக்குமார், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சுமதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் மணிகன்டராஜ், உதவி பொறியாளர் மூர்த்தி, நாங்குநேரி வட்டாச்சியர் இசக்கிபாண்டி மற்றும் விவசாய பெருமக்கள், அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu